மதுரை அருகே துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர் கைது

மதுரை அருகே துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர் கைது
X
மதுரை அருகே பெருங்குடியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே, பெருங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர், பரம்புப்பட்டியில் ரோந்து பணியில் சென்றபோது, மேல தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் 24. என்ற வாலிபர், போலீசை கண்டதும் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டி பிடித்தனர்.

அவரிடம் சோதனை செய்தபோது, அவர் 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தனர். அவர் எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார், எதற்காக துப்பாக்கியுடன் பதுங்கி இருந்தார் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!