வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய இளைஞர் கைது

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய இளைஞர் கைது
X

மதுரை எஸ்எஸ். காலனியில் சிசி டிவியில் பதிவான காட்சிகள்

வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வில் சைக்கிளை திருடிச் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்( 40). என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பேட்டரியால் இயங்கக் கூடிய சைக்கிள் மர்ம நபரால் திருடப்பட்டது என, மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கணேசன் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வில் சைக்கிளை மர்ம நபர் திருடிச் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணேசன் வீட்டின் முன் இருந்த சைக்கிளை திருடி சென்றது தேனி மாவட்டம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த சையது அபுதாஹீர் ( 31). என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture