மதுரை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மதுரை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
X

மதுரை அருகே மர்ம கும்பலால் காெலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசாேதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை, மற்றொரு வாலிபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி.இவருடைய மகன் மகேஸ்வரன் வயது 24, இவர் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனது, நண்பர் மாரீஸ்வரன் என்பவருடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், இவர் தான் தங்கியிருந்த வீட்டில்வந்த மர்ம கும்பல் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

அதைத் தொடர்ந்து, காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகேஸ்வரன் என்பவர் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். மேலும், மாரீஸ்வரன் என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கீரைத்துரை காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!