மதுரை அருகே, உலக பறவைகள் தினம் !
மதுரை அருகே உலக பறவைகள் தினத்தை ஒட்டி நடந்த, விழிப்புணர்வு.
மதுரை:
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியம் ,எல். கே .பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், உலக பறவைகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை ,அனுசியா வரவேற்றார்.
சமூக ஆர்வலர் முரா பாரதி , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பறவைகளின் முக்கியத்துவம், பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு, அழிந்து வரும் பறவை இனங்கள் ஆகியவற்றை குறித்து ,
மாணவ மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எல்லா பறவைகளும் விரும்பி உண்ணும் அத்தி மரக்கன்று நடவு செய்யப்பட்டது. மேலும் சக்கிமங்கலம் சாலையில் கால்வாயை ஒட்டி நூறு விதை பந்துகள் தூவப்பட்டன. மாணவ மாணவிகள் பல்வேறு வகையான பறவைகளின் படங்களை கையில் பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியர் மனோன்மணி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அம்பிகா, அகிலா, சுகுமாறன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்வில், பள்ளி சுற்றுச்சூழல் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu