மதுரையில் உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர் சங்கீதா
மதுரை மாவட்ட மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாகஉலக எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (01.12.2023) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, உலக எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம்1988-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படும்என்று அறிவித்தது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக தங்களின் பங்களிப்பை வழங்குதல்இ எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் அரவணைத்தல் ஆகிய நோக்கங்களை வலியுறுத்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எச்.ஐ.வி உள்ளோர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. அந்த வகையில், உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, பனகல் சாலை வழியாக மதுரை இராசாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில், 500-க்கும் மேற்பட்டு மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று எச்.ஐ.வி தொற்று தொடர்பான விழிப்புணர்வ வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஆர்.செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பா.குமரகுருபரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் பி.ஜெயபாண்டி உட்பட மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu