மதுரை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி, பசுமாடு உயிரிழப்பு

மதுரை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி, பசுமாடு  உயிரிழப்பு
X

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த பசுமாடு.

வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்த மின்னல் தாக்கியதில் பாலுவும், பசுமாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் அருகே மாடுமேய்த்துக்கொண்டிருந்த கட்டிடத்தொழிலாளி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். இத்தாக்குதலில் பசுமாடும் பலியானது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், தாலுகா, பெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பாலு (31). கட்டடத்தொழிலாளி. இவர், வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்த போது, திடீரென இடி தாக்கியதில் பாலுவும், அவரது மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீஸார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி