மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் மகளிர் தினவிழா

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் மகளிர் தினவிழா
X

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில், மகளிர் தினத்தையொட்டி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர் மன அழுத்த நோயாளிகள் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது.

நாளை மார்ச் 8ல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மதுரையின் புகழ்பெற்ற அமிக்கா நட்சத்திர ஹோட்டல் சார்பாக உலக மகளிர் தினம் தோப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் துயர் தணிப்பு மையம் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான மனநல மையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தோப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன், சுதா மதி, ஒருங்கிணைப்பாளர் பிலிப் ஜெய்சேகர், லலிதா பாலசந்தர், கெளசல்யா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணடைய மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சிறந்த சேவை வழங்கிய மருத்துவர்கள், செவியர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்துத் தெரிவித்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பாடல்கள், நடனம் ஆடி, கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.

இது குறித்து அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசய ராஜ் கூறுகையில், உலக மகளிர் தினம் கொண்டாடும் வேளையில், தோப்பூர் மருத்துவ மனையில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட மகளிர் உடல்நலம் பெறவும். அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளும், அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவியர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகிறோம்.

வெளி உலகத்தில் இருப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் வாழ்கிறோம். ஆனால் இங்கு அமைதியான மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் நீங்கள் இருக்கிறீர்கள்.

நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுடன் இருந்த நிகழ்ச்சி மிக மகிழ்ச்சியானது இந்த மகளிர் தினம் எங்களுக்கு மறக்கமுடியாத மகளிர் தினம். இந் நிகழ்ச்சி எங்களது அமிக்கா ஹோட்டலின் சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு சத்தான உணவு வழங்கி கொண்டாடுகின்றோம். இது வணிக நோக்கமல்ல மக்களின் சேவையில் எங்களின் பங்களிப்பு தொடர்ந்து தோப்பூர் அரசு மருத்துவ மனைக்கு உதவிகள் வழங்குவோம் எனக் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil