மதுரை அருகே முகநூல் நண்பரிடம் ரூ 2.50 லட்சத்தை இழந்த பெண்

மதுரை அருகே முகநூல்  நண்பரிடம் ரூ 2.50 லட்சத்தை இழந்த பெண்
X
மதுரை அருகே பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நபர் நட்பாக பழகி ரூ 2.50 லட்சம்- நகையை வாங்கி மோசடி செய்ததாக புகார்

மதுரை மாவட்டம் அயன் பாப்பாகுடி சேர்ந்த பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் மதுரை ஜெர்பி ஜெரீஸ் ஜோசப் என்ற நபர் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் லட்சுமியிடம் மிகவும் நம்பகமான பேச்சில் ஏமாற்றி ரூ 2.50 லட்சம் மற்றும் தங்க நகை பெற்று மோசடி செய்துள்ளார்.நாளடைவில் ஜெர்பி ஜெரீஸ் ஜோசப் மீது லட்சுமிக்கு சந்தேகம் எழுந்தது.இந்நிலையில், தான் கொடுத்த நகையையும் பணத்தையும் ஜெரீப் ஜெரீஸ் ஜோசபிடம், லட்சுமி கேட்டுள்ளார்.

ஜெர்பி ஜெரீஸ் ஜோசப் தரமறுத்தர மறுத்தகாகக் கூறப்படுகிறது .இந்நிலையில் லட்சுமி இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில், போலீசார் ஜெர்பி ஜெரீஸ் ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமூக வலைதளங்களில் இது போன்ற அடையாளம் அறிமுகமில்லாத ஏமாற்று நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்று மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

Tags

Next Story
ai devices in healthcare