மதுரை மத்திய தொகுதியில் மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா?

மதுரை மத்திய தொகுதியில் மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா?
X

மதுரை மத்திய தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளால் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்படும் நிலை தொடர்கிறது 

அமைச்சரும் எம்எல்ஏவுமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்

மதுரை மத்திய தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளால் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்படும் நிலை தொடர்கிறது .

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய சட்ட மன்ற உறுப்பினர் மாநில நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சியின் 17-வது வார்டு எல்லிஸ் நகர் 70-வது பிரதான சாலையில், சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பருவமழை தொடங்கும் முன்னே சாலைகள் அமைக்க மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். எனினும், மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் அதை கண்டுகொள்ளாதால், தற்பொழுது பெய்து வரும் மழையால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

ஒரு சில இடங்களில் சாலையின் நடுவில் உள்ள புதை சாக்கடைதிட்ட மூடிகளும் உடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாக்கடையில் விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் அதிகமுள்ள பகுதியாகவும் பெரியார் பேருந்து நிலையம் செல்லவும் இந்த சாலையில்தான் பள்ளிக் குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வரை பழுது ஏற்பட்டு சாலையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சாலையை சீர்செய்த பொதுமக்கள் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அமைச்சரும், இத்தொகுதி எம்எல்ஏவாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உரிய நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடுவார் என இப் பகுதி மக்களின் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil