தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் என்ன?- வெங்கடேசன் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் என்ன?- வெங்கடேசன் எம்.பி. பேட்டி
X

மதுரை அருகே துவரிமானில் சுகாதார திருவிழாவை வெங்கடேசன் எம்.பி. துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் என்ன? என்பது பற்றி வெங்கடேசன் எம்.பி. பேட்டி அளித்தார்.

மதுரை அருகே துவரிமான் பகுதியில் மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற சுகாதார திருவிழாவை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன் கூறும்போது

இன்று துவங்கிய சுகாதார திருவிழா மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 வட்டடாரங்களில் நடைபெறவுள்ளது. சுகாதாரத்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவ சேவைகளை கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த சுகாதார திருவிழா நடத்தபடுகிறது.இதனால். அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும்.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கவேண்டிய நிதி மற்றும் நிலக்கரி கிடைக்காததால் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைவரும் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.

இதனை விரைவில் சரிசெய்யபடவேண்டும். இதற்கான மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. ஒன்றிய அரசும் அதற்கான நிதி, மற்றும் நிலக்கரியை விடுவிக்க வேண்டும்.

நேற்றிரவு கழிவு நீர் தொட்டியில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும். இனிமேல் மனித கழிவை மனிதரே அள்ளும் அவல நிலையை தவிர்த்து இப்பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தவேண்டும்.

இது போன்ற மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,தி.மு.க.வுடன் கூட்டணி வேறு கம்யூனிஸ்ட் கொள்கை வேறு. அதனால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் போராட்டங்களை முன்னெடுக்க தயங்காது, சமரசம் செய்து கொள்ளாது என்றார்.

Tags

Next Story
ai solutions for small business