தற்காப்புக்கலை போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு

தற்காப்புக்கலை போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு
X

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8தங்கம், 12வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணி

Tharkappu Kalai -கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகளில் 8 தங்கம், 12 வெள்ளி பதக்கங்களை மதுரை அணியினர் வென்றனர்

Tharkappu Kalai -கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8தங்கம், 12வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணிக்கு ரயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பில் கோவா மாநிலத்தில் கடந்த 2ஆம் தேத முதல் 4ஆம் தேதிவரை தேசிய அளவிலான தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ, டேக்வோண்டோ, ரெஸ்லின் போன்ற பல்வேறு தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.

இந்த சிலம்பம் போட்டி பிரிவில் மதுரையை சேர்ந்த யுவன் சிலம்பம் அகாடாமியை சேர்ந்த 15 சிலம்பாட்ட மாணவர்கள் 8,10,12, 14,17,19,21 ஆகிய வயதினற்கான ஆண்கள், பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.இதனையடுத்து சிலம்பாட்ட பிரிவில் மதுரையை சேர்ந்த மாணவர்களானபிரதீப், சந்தோஷ் குமார், பிரகதீஷ்வரன் தருண், சிவா, லோகேஷ்குமார், சல்மான், கிருத்திகேஷ், தினேஷ்குமார்,வாசு தேவன், மகிஸ் ராம், சபரி, ஹரிஷ், ரித்தீஷ்குமார், பிரசன்னா ஆகிய மாணவர்கள் 8 தங்க பதக்கத்தினையும், 12வெள்ளி பதக்கத்தினையும் வெற்றி பெற்றனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தெற்காசிய அளவில் நடைபெறவுள்ள தற்காப்பு கலை போட்டியிலும், அதன் பின்னர் மலேசியா, இலங்கை, நேபாள ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டிகளிலும் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள்.கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்பு கலை போட்டிகளில் பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
தேர்தல் முடிவுடன் ஈரோடு மாவட்ட போலீசாரின் தேர்தல் பிரிவு கலைக்கப்பட்டது