வாடிப்பட்டியில் 10-வது நாளாக நீர் மோர் வழங்கும் விழா

வாடிப்பட்டியில் 10-வது நாளாக நீர் மோர் வழங்கும் விழா
X

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்.வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு10.வதுநாள் நீர் மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் வழங்கப்பட்டது:

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் தொடர்ந்து 10வது நாளாக நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக, கோடை காலத்தை ஒட்டி நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு 10-வது நாளாக வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் தலைமையில், நீர் மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் சர்பத் உள்ளிட்ட பொருட்கள் வழங்கிவரும் அதிமுக நிர்வாகிகளை வாடிப்பட்டி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் பி குமார், வாடிப்பட்டி மணிமாறன், பாலாவாவிடமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, வாவிடமருதூர் வடக்கு கிளை கழகச் செயலாளர் ஆர். பி. கோபி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பாரி ,விவசாய அணி செயலாளர் குமாரம் பாலன், கல்வேலி பட்டி கருப்பையா, தென்கரை நாகமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story