மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X

மதுரையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கூடுதல் ஆட்சியர் தொடங்கி வைப்பு.

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டாக்டர்.மோனிகா ராணா தலைமையில் நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி:

மதுரை: மதுரை மாவட்டம், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு , வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் & மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டாக்டர்.மோனிகா ராணா தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வெண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், இன்றைய தினம் கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர்.மோனிகா ராணா தலைமையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தொழில்

முனைவோர்கள் மையம் சார்பில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்று கையெழுத்திட்டனர். மேலும், பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை கவரும் வகையில், 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்ற வாசகம் பொறித்த ”செல்ஃபி பாய்ண்ட்” அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருமங்கலம் ஹொமியோபதி கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture