மதுரை அருகே விஜயகாந்த் மறைவுக்கு மொட்டை போட்ட தொண்டர்கள்

மதுரை அருகே விஜயகாந்த் மறைவுக்கு மொட்டை  போட்ட தொண்டர்கள்
X

விஜயகாந்த் மறைவுக்கு தொண்டர்கள் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

மதுரை அருகே விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது கட்சி தொண்டர்கள் மொட்டை போட்டனர்.

திருப்பரங்குன்றம் அருகே, அவனியாபுரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவு பற்றி அறிந்த தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதி தே.தி.மு.க. சார்பில் தே.தி மு.க கட்சி தலைவர் விஜயகாந்த் மரணமடைந்ததையொட்டி, அவரது திருஉருவபடத்திற்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், அவனியாபுரம் பகுதி தே.மு.தி.க. செயலாளர் செந்தில் ,வட்ட செயலாளர் வெற்றி,முருகேசன், தவமனி ஆகியோர் மொட்டையடித்து அஞ்சலி செலித்தினர்.

மற்றும் நிகழ்வில் வட்ட செயலாளர் அன்பழகன் பொதுக் குழஉறுப்பினர்கள் சேதுராமன். ராஜமாணிக்கம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மதுரை நடிகர் விஜயகாந்தின் சொந்த ஊர். சொந்த ஊரின் மீது விஜயகாந்திற்கு எப்போதுமே தனி பாசம் உண்டு. அதனால் தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை கூட மதுரை மண்ணில் தான் அவர் தொடங்கினார். அந்த வகையில் மற்ற எந்த மாவட்டங்களிலும் இல்லாத வகையில் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்திற்கு மொட்டை போட்டு தங்ளது உணர்வு பூர்வமான அஞ்சலியை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
நைட் தூங்குறதுக்கு முன்னாடி தண்ணீர் குடிக்கிறது நல்லதா,கெட்டதா ?..உடனே தெரிஞ்சுக்கோங்க..!