திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
X
திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம  மக்கள் ச லை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் , கடந்த 30 நாட்களாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர் . இதுகுறித்து, அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரிடமும் , மாவட்ட அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காததால் , குராயூர் கிழக்குத் தெரு பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் குராயூர் - காரியாபட்டி சாலையில் அமர்ந்து, குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாசவ நத்தம் , குராயூர் , ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீரின்றி பகுதி வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமங்களுக்கு வரக்கூடிய குடிநீர் பைப்புகள் சேதம் ஆகியுள்ளதால் , அதனை சீர் செய்ய அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட நிர்வாகமும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!