மதுரை அருகே காவல் ஆய்வாளரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
மதுரை அருகே ,காவல் ஆய்வாளரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
சோழவந்தான் அருகே தாராப்பட்டியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது தாராப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், விநாயகர் சிலை தொடர்பாக கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பெண்களை தகாத வார்த்தைகளால் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திட்டியதாக கூறியும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் ஒலிபெருக்கிகளுக்கு சேதம் விளைவித்து பெண்கள் மற்றும் கிராம பெரியவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் ஒற்றுமையாக உள்ளஇருதரப்பினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாகவும் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த சமயநல்லூர் சரக போலீஸ் டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் கொடிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமாதேவி திருக்குமரன் ஆகியோர் சாலை மறியல் செய்த பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர். தாராப்பட்டி கிராம மக்கள் மறியல் காரணமாக மேலக்கால் கோச்சடை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu