அலங்காநல்லூர் பகுதிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்கள்

அலங்காநல்லூர் பகுதிகளில் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. சோழவந்தnன் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், பொதுகுழு உறுப்பின் தனராஜ்,கூட்டுறவு சங்கத் தலைவர் முத்தையன், ஒன்றிய இளைஞர் அணி சந்தன கருப்பு, ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் பாண்டியம்மாள், கவுன்சிலர் ரேவதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன்,பிரேமா, வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பற்றாளர் பிரகதீஸ்வரன், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரகுபதி நன்றி கூறினார்.
இதை போலவே, அச்சம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத்தலைவர் ஸ்ரீ சுதா முருகன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் ஜெயகணேசன் ஒன்றியபற்றாளர் ஜீவராணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மகளிர் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.
கோட்டை மேடு ஊராட்சியில், தலைவர் சர்மிளாஜிமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வானதி இளையராஜா, ,ர்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . ஊராட்சி செயலர் முத்துகுமார் நன்றி கூறினார்.
கல்லணை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு , துணைத் தலைவர் அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பற்றாளர், சரவணன் கிராம மக்கள் கலந்து கொண்டனர் . ஊராட்சி செயலர் சந்திரன் நன்றி கூறினார்.
ஆதனூரில், சத்தியா செந்தில்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் அழகு பிள்ளை பொம்மன், பற்றாளர் ,பாலசந்திரன் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மாணிக்கம் நன்றி கூறினார் .
முடுவார்பட்டியில், நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் உமாமுரு கேசன், வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில், ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி நன்றி கூறினார்,.
அய்யூர் ஊ ராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அபுதாகிர் தலைமையில் ,கிராம சபை கூட்டம் நடந்தது , ஒன்றியக் கவுன்சிலர் விமலாதேவி தயாளன்,துணை தலைவர் கனிமொழி நடராஜன், ஒன்றிய மேற்பார்வையார் சந்திர லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஊரட்சி செயலர் ராஜா நன்றி கூறினார்
பாரை பட்டி ஊராட்சியில், கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி முத்தையன் தலைமையில் நடந்தது. ஒன்றியக் கவுன்சிலர் வசந்தி கலைமாறன், துணைத் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தனர் . ஊராட்சி செயலர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu