விஜய் மக்கள் மன்றம் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு: அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு
மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய எம்எல்ஏ-ராஜன்செல்லப்பா.
அதிமுக கூட்டணியுடன் விஜய் மக்கள் இயக்கம் இணைய வாய்ப்பு உள்ளதாக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக, திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுகவின் கொடியை ஏற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மேலும் கூறியதாவது:அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு, தலைமைக் கழகம் அறிவுறுத்தலின்படி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் முழுவதும், திருப்பரங்குன்றத்தில் தொடங்கி, மேலூர் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கியும், நலத்திட்டங்கள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தால், வீறுகொண்டு எழுந்து பீனிக்ஸ் பறவைபோல் அதிமுக ஆட்சியை பிடிக்கும்.கடந்த 2011-ல் நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 10 மாநகராட்சியும் அதிமுக வென்றது, அப்போது திமுக அழிந்துவிடும் என அதிமுக கூறவில்லை, அதிமுக அதிக தொகுதிகளை வென்று மீண்டும் ஆளும் கட்சியாக வரும்.
தற்போது, செயல்பட்டு வரும் திமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அதனை எடுத்துச் செல்லும் பணியில், அதிமுக தொடர்ந்து செயல்படும், மூன்று ரூபாய் பெட்ரோல் விலை குறைத்தார்கள், ஆனால் ,தற்போது ஆறு ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கான நடவடிக்கை என்ன எனறு இன்னும் கூறவில்லை.வெள்ளை அறிக்கை அறிவித்தது போல், பெட்ரோல் காண மாநில அரசு, மத்திய அரசுக்கான தெளிவான விளக்கம் கூறவில்லை என குற்றம் சாட்டினார். தற்போதைய அரசு அறிக்கைகளையும் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்று கிறதே தவிர, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வில்லை.
விஜய் மக்கள் இயக்கம் ஒன்றிய, மாவட்ட தேர்தல் ஜெயிக்கவில்லை வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதை வரவேற்கிறோம். ஏன் விமர்சிக்கவில்லை என்றால், நாளை அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு வரலாம்.. எனவே, ஆளும் கட்சியை எதிர்க்கக் கூடியவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி அதிமுகவுக்கு உண்டு. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்களை விமர்சிப்பது இல்லை, ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களை அனைவரையும் ஒன்று இணைத்து அரசியல் வியூகம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்கான தொடக்கமே இந்த பொன்விழா என்று எம்.எல்.ஏ வி.வி ராஜன் செல்லப்பா கூறினார். நிகழ்வில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் உட்பட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu