லியோ படம் வெற்றி பெற கோயிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் ரசிகர்கள்
லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் அன்னதானம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் லியோ படம் வெற்றி பெற வேண்டி அர்ச்சனை செய்து ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர்.
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், லியோ படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் நகர் மாணவர் அணி சார்பாக விஜயின் லியோ படம் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.விஜய் மக்கள் இயக்க மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணித்தலைவர் யு.பி.எம்.ஆனந்த் தலைமையில் மதுரை முத்துப்பாண்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற 19-ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி வருகிற 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், காலை 9 மணி என்பதற்கு பதில் 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், காலை 4 மணிக்காட்சிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu