இளமனூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

இளமனூர் ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இளமனூர் ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இளமனூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், கால்நடை மருத்துவர் ஞான சுப்பிரமணியன் சத்யபிரியா மற்றும் கால்நடை துறை ஆய்வாளர்கள் சோனைமுத்து சாந்தி செல்வி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், மாடுகளுக்கு கருவூட்டல் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. ஆடுகள் ,கோழிகள், நாய்கள் போன்ற கால்நடைகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. தடுப்பூசி, கோமாரி நோய், காணை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும், கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்த 3 நபர்களுக்கும் ஆரோக்கியமான கால்நடைகளுக்கான பரிசுகள் 3 நபர்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் டாக்டர்கள் ஞான சுப்ரமணியன், சத்தியபிரியா ஆகியோர் வழங்கினர். முகாமில், 117 மாடுகள், 437 வெள்ளாடுகள், 207 செம்மறி ஆடுகள் ,589 கோழிகள், 35 நாய்கள் உள்ளிட்ட 1385 கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu