மதுரையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரசாரம்..!

மதுரையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரசாரம்..!
X

மதுரையில் பாஜக வேட்பாளரை, ஆதரித்து வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார். 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மதுரை பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

மதுரை:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து மதுரை விளக்குத்தூண் அருகே ஆரம்பித்து காமராஜர் சாலை வழியாக மாரியம்மன் தெப்பக்குளம் வரை பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் அன்னை மீனாட்சி யின் தாமரையை மதுரையில் மலர செய்து மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை பெற்றிட வேண்டுகிறோம் எனவும் மற்ற திமுக அதிமுக எம்பி வேட்பாளர் உங்களிடம் வாக்குக் கேட்க வந்தால் உங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேளுங்கள். பிறகு நாங்கள் ஓட்டு போடுகிறோம் எனக் கூறச் சொன்னார். எனவே, எந்த பிரயோசனமும் இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

இதில், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், துணைத் தலைவர் ஜோதி மணிவண்ணன், பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன், சந்தோஷ் சுப்பிரமணி டி எம் பாலகிருஷ்ணன் பொருளாளர் நவீன் கால் சென்டர்சாம் சரவணன் வக்கீல் முத்துக்குமார் மற்றும் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் வேல்பாண்டியன் மகளிர் அணி மாவட்டதலைவி ஓம் சக்தி தனலட்சுமி தலைமையில் ஆயிரக்கணக்கான மகளிர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!