மதுரையில் இறப்பிலும் தன் கடமையை செய்த வேன் ஓட்டுநர்: பயணிகள் நெகிழ்சி

மதுரையில் இறப்பிலும் தன் கடமையை செய்த வேன் ஓட்டுநர்: பயணிகள் நெகிழ்சி
X
மதுரை பைபாஸ் சாலை வழியாக வேனில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது

மதுரையில் மாரடைப்பால் மரணம்; இறக்கும் தருவாயில் கூட விபத்தை ஏற்படாத வண்ணம் சாலை ஓரமாக வேலை நிறுத்தி மரணமடைந்த சம்பவம் பயணிகளை நெகிழ்ச்சியடையச் செய்தது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு ( 33) .இவர், தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், மதுரை பைபாஸ் சாலை வழியாக வேனில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் ஓட்டி வந்த வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுனர் இருக்கையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு அவரை சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்ததை தொடர்ந்து, எஸ். எஸ் .காலனி போலீசார் உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறப்பிலும் தன் கடமையை செய்து மரணமடைந்த வேன் டிரைவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்