மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உற்சவருக்கு வைரவேல் காணிக்கை:
திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு வைர வேல் மதுரையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்களான பாலகுமார், சபரி பாபு சகோதரர்கள்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவருக்கு முதல் முறையாக வைரவேல் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது:
முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின், 8-வது நாளான இன்று காலையில் உற்சவர் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.இந்த உற்சவர் தான் தேரோட்டம் மற்றும் சுவாமி விழாக்களில் வீதி உலா வருவது வழக்கம்.உற்சவர் முருகனுக்கு இதுவரை வெள்ளியிலான வேல் மட்டுமே சாற்றப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மதுரையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்களான பாலகுமார், சபரி பாபு சகோதரர்கள் அவர்களுடைய தந்தையின் நேத்தி கடனை நிறைவேற்றும் வகையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வெள்ளியிலான வேல் செய்து அதில் தங்க முலாம் பூசப்பட்டு வைரங்கள் பதிக்கப்பட்டவைர வேலை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.இந்த வைர வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் முருகன் தெய்வானைக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu