மதுரையில் வைகை இலக்கியத் திருவிழா: ஆட்சியர் தகவல்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில் வைகை இலக்கியத் திருவிழா நடத்தப்படவுள்ளது

HIGHLIGHTS

மதுரையில்  வைகை இலக்கியத் திருவிழா: ஆட்சியர் தகவல்
X

மதுரை வைகை இலக்கிய விழா குறித்த போஸ்டர் வெளியிடும் நிகழ்வில் பங்கேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர்

மதுரையில், வைகை இலக்கியத் திருவிழா:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில்வைகை இலக்கியத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் பொருநை, வைகை, காவேரி, சிறுவாணி என்ற நதி நாகரீக அடிப்படையில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு விழாக்களும் சென்னையில் ஒரு விழாவும் கொண்டாடுவது என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

அதன்படி, மதுரை தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 பெருநகரங்களில் வைகை, காவேரி, பொருநை மற்றும் சிறுவாணி இலக்கியத் திருவிழாக்களும், சென்னை பெருநகரில் சென்னைப் இலக்கியத் திருவிழா என மொத்தம் 5 இலக்கியத் திருவிழாக்கள் நடத்த வேண்டுமென்ற என்ற தமிழக அரசின் முடிவை செயல்படுத்தும் விதமாக இத்திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதில், காவேரி , பொருநை, சிறுவாணி மற்றும் சென்னை இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. 5-வது இலக்கியத் திருவிழாவாக ”வைகை இலக்கியத் திருவிழா” வருகின்ற 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது.

இந்த வைகை இலக்கியத் திருவிழாவில், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மிக முக்கியமான படைப்பு ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் பங்குபெற உள்ளனர். தமிழ் இலக்கியத்தின் பழமைக்கும், மரபுக்கும் முக்கியமான அடையாளமாக இருப்பது வைகையும் மதுரையும் ஆகும். மதுரை இலக்கியத் திருவிழா மிக சிறப்பான திருவிழாவாக அமையும் என்றும் அதற்கான திட்டமிடுதல் மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் நூலகத்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில், உள்ள இளைஞர்கள், மாணவர்கள் , இலக்கிய நண்பர்கள்,வாசகர்கள் அனைவரும் வைகை இலக்கியத் திருவிழாவில் பங்கெடுத்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த வைகை இலக்கியத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பங்குபெற உள்ளனர். இவர்கள் அனைவரும் மொழி, இலக்கியம், மதுரை, மதுரையின் எழுத்துக்களைச் சார்ந்து உரையாற்ற உள்ளனர். மேலும், அனைத்து தரப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஆளுமைகள் வைகை இலக்கியத் திருவிழாவில் பங்குபெற உள்ளனர் என்றார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

இக்கூட்டத்தின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Happy Birthday Anni Quotes In Tamil பிறந்த நாள் நம் வாழ்வினை ...
 2. லைஃப்ஸ்டைல்
  Plant Based Diet in Tamil- இதய நோயாளிகளை பாதுகாக்க உதவும் தாவர...
 3. ஈரோடு
  ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை 57வது ஆண்டு விளையாட்டு விழா
 4. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 5. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 6. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 7. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 8. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 9. ஈரோடு
  ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து: முன்னாள் அமைச்சர் கருப்பணன்...
 10. திருவள்ளூர்
  சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் சேலையில் தீ