வண்டியூர் செக்போஸ்டில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

Salem Rowdy
X

Salem Rowdy

வண்டியூர் செக்போஸ்ட் அருகே கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, வண்டியூர் செக்போஸ்ட்அருகே அண்ணாநகர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ள இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 100 கிராம் கஞ்சாவும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய் 7ஆயிரமும் இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்து இரண்டு வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்‌.விசாரணையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கலிராமடையச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சரவணன் 38, சிம்மக்கல் திருமலைராயர் படித்துரையை சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஷ் 29 என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விளாச்சேரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மார்ச் 6 விளாச்சேரி ஆதி சிவன் தெருவை சேர்ந்தவர் யூஜின் ராஜ் மகள் நித்ரா ஜோனிடா 19. இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தந்தை யூஜின் ராஜ் திருநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட நித்ராஜோனிடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ஹிந்த்புரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரைமார்ச்.6.ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் நான்காவது தெரு முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 70 .இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய மகன் ராம்குமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் நாகராஜனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வரிடம் மக்கள் நலப் பணியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு

மதுரை மார்ச் 6 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திரும்பப்பெற்று மீண்டும் பணி நியமன ஆணை வழங்க கோரி மக்கள் நல பணியாளர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் சந்திரன் மாநில செய்தி தொடர்பாளர் ஜான்சன் மற்றும் நிர்வாகிகள் மதுரை வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மண் ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனதில் கூறி இருப்பதாவது, திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டு பணியிழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மக்கள் நல பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடையானை பெற்று இன்று வரை நிலுவையில் இருக்கும் மக்கள்நலப்பணியாளர்கள் வழக்கை தமிழக அரசு திரும்ப பெற்று மீண்டும் மக்கள் நல பணியாளர்கள் என்ற பெயரில் நிரந்தர பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil