சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனத்தை திருடும் கும்பல்: வைரலான சிசிடிவி காட்சி

சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனத்தை திருடும் கும்பல்: வைரலான சிசிடிவி காட்சி
X

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு 11:30 மணி அளவில் திருமண மண்டபம் முன்பு வரும் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்கள் இரண்டை கள்ளச் சாவி உதவியுடன் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இது குறித்து இருசக்கர வாகன உரிமையாளர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் ஆகியோர் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளில் தெரியும் மர்ம நபர்களின் உருவங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

சமீப காலமாக சோழவந்தான் பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதால் இந்த பகுதியில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர் ஏற்கனவே சோழவந்தான் அருகே துர்க்கை அம்மன் கோவிலில் இரவு நேரத்தில் புகுந்த திருடர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story