மதுரை திருநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான இருநபர்களிடமிருந்து 2 பைக் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபடுவது குறித்த புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் செந்தில்குமார் உத்திரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு திருநகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
வழிப்பறி நடைபெற்ற இடங்களில், சிசிடிவி காட்சிகளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தபோது ,தொடர் திருட்டில் ஈடுபட்டமுக்கிய குற்றவாளியான கோவில் பாப்பா குடி அஜித் அஜித் குமார், விக்கி (எ) விக்னேஷ், உள்ளிட்ட 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி விக்னேஷ் ஒத்தக்கடையில் பதுங்கியிருந்த தகவலையடுத்து தனிப்படை போலீஸார் ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் தென்னரசு, மகேஸ், அலியார், வைரவேல் முத்துகுமார் ஆகியோர், விக்னேஸ், அஜித் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சம் மதிப்புள்ள தங்கம், 2 இருசக்ர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu