மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து 2 பேர் தற்கொலை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து 2 பேர் தற்கொலை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
X

பைல் படம்.

கொரோனா தொற்று உறுதியானதால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா தனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கொரானா அச்சத்தின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா மற்றும் தனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ,ஜோதிகா மற்றும் ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!