மதுரையில் பெய்த பலத்த மழையினால் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம்

மதுரையில் பெய்த பலத்த மழையினால் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம்
X

இடி மழையினால் சேதம் அடைந்த டிவியை காட்டும் பெண்.

மதுரையில் பெய்த பலத்த மழையினால் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம் அடைந்தன.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் பெய்த மழையில் இடி, மின்னல் தாக்கியதில் 11 டிவிகள் சேதம் அடைந்தன. மற்றும் வீட்டின் மின் இணைப்புகளும் பழுதடைந்தன.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மாடர்ன் தெரு பகுதியில் நேற்று மாலை பெய்த மழையுடன் இடி மின்னல் சேர்ந்து விழுந்தது .இதில், மீனாட்சி நகர் மார்டன் தெரு பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 11 டிவிகள் சேதம் அடைந்தன.

மேலும் ,ஒரு சில வீடுகளில் இடி விழுந்ததில் விரிசல் ஏற்பட்டது .மேலும், வீடுகளில் உள்ள மின் இணைப்புகள் பாதி சரியாக வேலை செய்யவில்லை எனவும்,மின் இணைப்பில் தடை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினர்.

பலத்த காற்றுடன் பெய்த மழையினால் இடி, மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 11 டிவிகள் சேதம் அடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

மதுரை அருகே சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை, தேனூர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி, முருகதூரன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு