மதுரை அருகே கிராமங்களில் டி.டி.வி. தினகரன் மனைவி தீவிர பிரசாரம்..!

மதுரை அருகே கிராமங்களில் டி.டி.வி. தினகரன் மனைவி தீவிர பிரசாரம்..!
X

டிடிவி தினகரன் மனைவி கிராமங்களில் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவர் தினகரனுக்காக பிரசாரம் செய்ய வந்திருந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சோழவந்தான்:

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பிரசாரத்திற்கு வந்த டிடிவி தினகரன் மனைவி அனுராதாவிற்கு, மருது பெட்ரோல் பங்கில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ,வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், லிங்கம் சிவகாமி, மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் பகுதி கிராமங்களில் டிடிவி மனைவி, பாஜகவின் செயல்பாடுகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்தார். பாரதப் பிரதமர் மோடியின், திட்டங்களை மக்களிடையே விளக்கிப் பேசினார். இந்தியாவில் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி மன்னாடி மங்கலம் ,முள்ளி பள்ளம், சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார் . அவருடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களும் பாஜக நிர்வாகிகளும், தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!