மதுரையில் பெய்த பலத்த மழையால் ரோட்டில் சாய்ந்த மரங்கள்
ரோட்டில் சாய்ந்து விழுந்த மரம்.
மதுரையில் பலத்த மழை பெய்தது. சாலையில் குறுக்கே மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் இன்றி தப்பினர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்கிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் இந்த மாத தொடக்கத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை காலம் மறைந்து குளிர்காலம் போன்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது.
இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் பிரதான சாலையில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது, ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் சாலையில், உள்ள மதுரை கல்லூரி எதிரே உள்ள சாலையில் மிகப்பெரிய மரம் ஒன்று சாலையில் குறுக்கே விழுந்து.ஒரு வீட்டின் மேலே விழுந்தது.
உயர் மின் அழுத்த கம்பியின் மீது மரம் விழுந்ததால், மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும், மரம் விழுந்த இடத்தின் அருகே தள்ளு வண்டியில் சோமாஸ், வடைகள் உள்ளிட் பலகாரம் விற்கும் கடை ஒன்று உள்ளது.
நேற்று விடுமுறை என்பதால்,அந்த கடை திறக்கப்படவில்லை. ஆட்கள் யாரும் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் வாகனம் ஏதும் அந்த பகுதியில் வரவில்லை. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி மரத்தை அகற்றினர். மேலும், மின்வாரிய ஊழியர்கள் அறுந்து போன மின் வயர்களை புது வயர்களாக மாற்ற மின் இணைப்பை துண்டித்து ,
புதிய வயர்கள் மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு, பணிகளை மேலும் தூரிதப்படுத்தினார் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மிகப் பெரிய ராட்சத மரம்சாலையில், குறுக்கே விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu