மே 5ம் தேதி, மதுரையில் வணிகர்கள் சங்க மாநாடு..!
மதுரையில், நடைபெறும் வணிகர் சங்கர் மாநாடு.
வணிகர் சங்க மாநாடு:
மதுரை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா நடைபெற்றது.
மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் நாகரத்தினம் அங்காளம்மாள் திடலில் நடைபெற்ற விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை மண்டல தலைவர் செல்லமுத்து மதுரை மாவட்ட செயலாளர் அழகேசன் மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
மற்றும் மாநாட்டிற்கான கால்கோள் விழாவில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் , மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர் சங்க தலைவர் தெய்வராஜன் மதுரை நுகர் பொருள் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தின மாநில மாநாடு வரும் மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. வணிகர் சங்ககளின பேரமை சார்பில் வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான கால் கோள் விழா வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரில் உள்ள நாகரத்தினம் - அங்காளம்மாள் திடலில் மாநாடு நடைபெற உள்ளது.
விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் விடுதலை முழக்க மாநாடு கால் கோள் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிலே ஐந்து முக்கியமான தீர்மானங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
மாநாட்டிற்கு பிறகு புதிய அரசு ஆட்சி கட்டிலில் அமைக்கிறது. மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் வணிகர் சங்கங்களில் கருத்துக்களை கேட்கும் அரசு தான் அமையும் . சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலம் அகற்றப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மும்பை சேர்ந்த முதலாளிகள் கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தமுயல்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுக்கும் முயற்ச்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என விக்கிரம ராஜா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu