கண் தானத்தை வலியுறுத்தி மூன்று சக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம்

கண் தானத்தை வலியுறுத்தி மூன்று சக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம்
X

பைல் படம்

அரிமா சங்கம் சார்பில் கண் தானத்தை வலியுறுத்தி 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகனப் பயணம் நடைபெற்றது

கண் தானத்தை வலியுறுத்தி 2600 கிலோமீட்டர் தொலைவுக்கான மூன்று சக்கர வாகன பயணம் மதுரைக்கு வந்தது.

சென்னை அரிமா 324கே மாவட்டம் சார்பில், கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் இருந்து 2600 கிலோமீட்டர் தொலைவுக்கான மூன்று சக்கர வாகன பயணத்தை மேற்கொண்டனர். சென்னையில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மாவட்டம் சென்றனர்.

அங்கிருந்து புறப்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வழியாக இன்று மதுரை வந்தனர். சென்னை அரிமா 324 கே மாவட்ட கண்தானம் விழிப்புணர்வு மாவட்ட தலைவர் ஷோபா ஸ்ரீகாந்த், சுரேஷ் மற்றும் 30 மாற்று திறனாளிகள் மூன்று சக்கர வாகன பயணத்தை மேற்கொண்டனர்.

மதுரை வந்த அவர்களுக்கு, மதுரை நேதாஜி ரோடு நேதாஜி சிலை முன்பு அரிமா மாவட்டம் 324 பி3 மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ஆடிட்டர் செல்வம், மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனரும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் தலைவர் நெல்லை பாலு, தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமார், கோபி கண்ணன், ஜெயக்குமார் உட்பட பலர் வரவேற்று அங்கிருந்து கொடியசைத்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்வு குறித்து, கண் தானம் விழிப்புணர்வு மாவட்டத் தலைவர் சோபா ஸ்ரீகாந்த் கூறுகையில்: ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய வேண்டும் எவ்வளவோ பேர் விழிகளை இழந்த நிலையில் உள்ளவர்களுக்கு இந்த கண் பொருத்தப்படும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதுபோலவே கண் தானமும் மிகச் சிறந்தது. ஒவ்வொரு குடிமகனும் கண் தானம் செய்ய வேண்டும் என்று பேசினார். விழிப்புணர்வு பயண குழுவினர் மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வழியாக கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றனர்.

பன்னாட்டு அரிமா சங்கங்கள் (Lions Clubs International, LCI) உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!