மதுரை அருகே நகைக் கடை அதிபரை கடத்திய மூவர் கைது
மதுரை அருகே காரில் சென்ற நகைக்கடை அதிபரை அவர் வைத்திருந்த இரண்டரை பணம் கோடி ரூபாயுடன் கடத்திச் சென்ற அவரது கார் ஓட்டுனர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அருகே காரில் சென்ற நகைக்கடை அதிபரை அவர் வைத்திருந்த இரண்டரை பணம் கோடி ரூபாயுடன் கடத்திச் சென்ற அவரது கார் ஓட்டுனர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை, அரசரடியில் நந்தினி ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வரும் அதன் உரிமையாளர், தர்மராஜ் ( 61 ).அரசரடி, மதுரை என்பவர், தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில், அதன் ஓட்டுனர் பிரவீன்குமார்( 26.) விளாச்சேரி மற்றும் நகை கடை ஊழியர் கோவிந்தராஜன், என்பவருடன், நாகர்கோவிலுக்கு நகை வாங்குவது தொடர்பாக பணம் ரூபாய் இரண்டரை கோடியுடன் சென்றுள்ளனர்.
அப்போது, திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கில், மேற்படி வாகன ஓட்டுனரும், ஊழியரும் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை விட்டுச் சென்ற போது, அங்கு வந்த இரண்டு எதிரிகள் கத்தியை காட்டி மேற்படி உரிமையாளரை மிரட்டி காரினை எடுத்துச் சென்றுள்ளனர்.இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், காவல் கண்காணிப்பாளர், பாஸ்கரன் உத்தரவின்பேரில்,3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர். இதில், மேற்படி கடத்தப்பட்ட நகை கடை உரிமையாளர் தர்மராஜ், சேடபட்டி அருகிலுள்ள அத்திப்பட்டி கிராமத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும், விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர், விசாரணை செய்தபோது மர்ம நபர்கள் கடை உரிமையாளரிடம் இருந்த அவருடைய செல்போன், அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் 20 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், மேற்படி வாகன ஓட்டுனர் பிரவீன்குமார் என்பவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் செய்த விசாரணையில் தான் தன்னுடைய உரிமையாளருடன் பணம் கொண்டு செல்வதை தன்னுடைய நண்பர்களான மொட்டை மலையை சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் மற்றும் உக்கிரபாண்டி மகன் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரும் சேர்ந்து தங்களுக்குள் திட்டம் தீட்டி அந்த பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளனர். அவர்கள் திட்டம் தீட்டியபடி அதன் ஓட்டுநர் பிரவீன்குமார் சிறுநீர் கழிப்பதற்காக நேசநேரி விலக்கில் நிறுத்தியுள்ளார். அப்போது ,அங்கு வந்த எதிரிகள் இருவரும் மேற்படி காருடன் உரிமையாளர் தர்மராஜ் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் எதிரிகள் இருவரும் எழுமலை அருகே இறக்கி விட்டு, ஒரு மூலம் அங்கிருந்து பெரியகுளம் சென்று விட்டு பஸ்ஸில் திண்டுக்கல் சென்று கொள்ளையடித்த பணத்தை திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து தங்கியுள்ளனர். விசாரணையில், தனிப்படையினருக்கு தெரிய வரவே தனிப் படையினர் விரைந்து சென்று லாட்ஜில் தங்கியிருந்த மேற்படி எதிரிகள் அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் கைப்பற்றி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் இரண்டரை கோடி உரிமையாளர் தர்மராஜ் அணிந்திருந்த தங்க மோதிரம் செல்போன் ஆகியவற்றையும் எதிரியிடம் இருந்து கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரவீன்குமார், அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்
இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் கைப்பற்றிய, தனிப்படையினரை, மதுரை சரக காவல் துணை தலைவர் பொன்னி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார். இவ்வாறாக ,அதிக அளவில் பணம் கொண்டு செல்பவர்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
கொண்டு செல்லும் வாகனத்தில் முன்பும் பின்னும் உள்ளேயும் கேமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும்.பணம் கொண்டு செல்லும்போது, கண்டிப்பாக பாதுகாப்புக்கு என துப்பாக்கி உரிமம் வைத்துள்ள நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும். தேவையெனில் உரிமையாளர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று பாதுகாப்புக்காக தங்களுடன் வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும், செல்லும் வழியில் தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது.செல்லும் வழியில் உள்ள காவல் நிலையங்களில் அதிகாரிகளின் தொடர்பு எண்களை தெரிந்து இருக்க வேண்டும். கண்டிப்பாக இடர்பாடு வரும் காலங்களில் காவல் துறையில் அவசர அழைப்பு எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu