மதுரை அருகே உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜை ..!

மதுரை அருகே உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜை ..!
X

மதுரை அருகே, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை வழிபாடு.

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் உலக நன்மைக்காக 108 விளக்கு ஏற்றப்பட்டு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு.

மதுரை:

மதுரை மாவட்டம், திருநகர் அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவி சமேத திருக் கோவிலில், உலக நன்மை வேண்டியும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டியும், 108 விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.


இந்த விளக்கு பூஜையில், குழந்தை வரம் வேண்டியும், மாங்கல்யம் நிலைக்கவும், திருமண பாக்கியம் வேண்டியும், கல்வி, செல்வம் , சிறந்த வேலை வாய்ப்பு வேண்டியும் பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து , 2 மணி நேரமாக நடைபெற்று வந்த , இவ்விளக்கு பூஜையில் சரஸ்வதி , லட்சுமி, துர்க்கை மற்றும் சுவாமிகளின் மந்திரங்கள் முழங்கியவாறு பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் வழிபட்டனர்.

விளக்கு என்பது ஒளி கொடுப்பது. அந்த ஒளியை நாம் புனிதமாக அல்லது கடவுளுக்கு உரியதாக தீபம் என்று பக்தியோடு அழைக்கிறோம். அப்படியான தீபம் ஏற்றி இந்த உலகம் அமைதியானதாக, வளமானதாக, ஆரோக்யம் நிறைந்ததாக விளங்கவேண்டும் என்று ஒருமித்த கருத்துடன் நூற்றி எட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நாம் நினைப்பதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!