மதுரை திடீர்நகர் தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
மதுரை திடீர்நகர் தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
மதுரை திடீர் நகர் தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர் நகரில் கோயில் விழாவை ஒட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இத் திருக்கோயிலில், கடந்த சில நாட்களாக திருவிழா நடந்து வருகிறது திருவிழாவை ஒட்டி பக்தர்களால், தேவி கருமாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், அழகு குத்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, உலக நன்மைக்காக கோவில் முன்பாக திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.இதில் ,ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ,மதுரை திடீர் நகர் தேவி கருமாரியம்மன் ஆலய விழா குழுவினர் செய்தனர். விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை, திடீர் நகர் காவல் நிலையத்தினர் செய்திருந்தனர்.
திருவிளக்கு பூஜையின் பலன்கள்...
இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது செய்யலாம்? பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன.
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.வைகாசி - செல்வம் செழிக்கும்.ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும்.ஆவணி - புத்தித்தடை நீங்கும்.புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்.ஐப்பசி - நோய்கள் உண்டாகும்.கார்த்திகை - நற்பேறு கிட்டும்.மார்கழி - ஆரோக்கியம் கூடும்.தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.மாசி - துன்பங்கள் நீங்கும்.பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu