5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறப்பு
மதுரை பாண்டி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.
தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 14ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாளைக்கு தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு கொரோனா 3-ஆம் அலை மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பொங்கல் மற்றும் தைப்பூச திருவிழா உட்பட பக்தர்கள் அனுமதியின்றி ஆகம விதிப்படி அனைத்து கால பூஜைகளும் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்கழி மாதத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் 04.30 மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், ஐந்து நாட்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது, மார்கழி மாதம் முடிந்ததால் மீண்டும் வழக்கம்போல் கோவில் நடை திறக்க காலை 5.30-மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 01.00-மணிவரை செயல்படும்.
அதே போல் ,மாலை 04.00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு இரவு 9.15 மணிவரை செய்யப்படும் என்று கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 நாட்களுக்குப் பின் கோவில் திறக்கப்பட்டுள்ளதால், வழக்கம்போல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணிந்த நபர்கள் மட்டுமே உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.
இதே போல் மதுரை பாண்டி கோயிலும் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் கூடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu