பூப்பல்லக்கில் பவனி வந்த மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி
திருப்பரங்குன்றம் ,முருகன் பூப்பல்லக்கில் பவனி.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி தெய்வானை மொட்டையரசுவில் இருந்து பூப்பல்லாக்கில் சன்னதி நோக்கி புறப்பட்டார்:பூப்பல்லாக்கு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழாவை முன்னிட்டு, மொட்டையரசு விழா நடைபெற்றது.
கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக வசந்த விழா துவங்கியது இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று வைகாசி விசாக பால்குட நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மற்றும் மதநினைச்சு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி தேர்க் காவடி இளநீர் காவடி போன்றவை எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். வைகாசி வசந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக மொட்டையரசு விழா நடைபெறும்.
இதற்காக காலையில், சுப்பிரமணிய சுவாமி தெய்வானை யுடன் தங்க குதிரை வாகனத்தில் சன்னதி தெருவிலிருந்து மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் தியாகராஜர் கல்லூரி வழியாக மொட்டையரசு சென்றது.
பின்னர், இன்று இரவு 9 மணி அளவில் மொட்டையரசிலிருந்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகம், வழியாக திருக்கோவில் சென்றடைந்தது. பூப்பல்லாக்கு நிகழ்ச்சி ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu