திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஏப். 8 ல் திருக்கல்யாணம்..
Murugan Thirukalyanam
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், ஏப். 8-ல் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
Murugan Thirukalyanam-மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வருகின்ற 08.04.2023-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4.மணியளவில், அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலி லிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேத்தியாவார்கள்.
எனவே, அன்றைய தினம் அதிகாலை 4. மணியளவில் அருள்மிகு அம்மன் அருள்மிகு சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை இத்திருக்கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும் இத்தகவலை இத்திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றார்கள்.ஆலயத்தில் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் ஆடிவீதியில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் துணை ஆணையர் , செயல் அலுவலர் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்... இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க மலையின் அடிவாரத்தில், ஊரின் நடுவே குன்றே கோயிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோயிலே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் முறையாகப் பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்தலமாகும்.
திருப்பரங்குன்றம் 275 தேவாரத் தலங்களில் ஒன்றாகப் பெருமை பெற்று உள்ளது. இத்திருகோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1050 அடி உயரத்தில் உள்ளது. இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம். கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மூலவர் : சுப்பிரமணிய சுவாமி உற்சவர் : சுப்பிரமணிய சுவாமி. அம்மன்/தாயார் : தெய்வானை அம்மன்.தல விருட்சம் : கல்லத்தி ஆகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu