/* */

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்
X

அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை அவனியாபுரம் மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை அருகே உள்ள அவனியாபுரத்தில், ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கல்யாண விழா சிறப்பு வாய்ந்தது.

புராணங்களில் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது விளையாடிய திருத்தலமாக இது கருதப்படுகிறது. சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் திருவிழாவைப் போல், அவனியாபுரம் பால மீனாம்பிகை திருக்கோயிலும் கொடியேற்றத்துடன் திக்விஜயம் ,திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனையொட்டி, இன்று காலை எட்டு நாற்பது மணியளவில் பால மீனாம்பிகை- கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோவில் குருக்கள் நாகசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் இணைந்து திருக்கல்யாண வைபோகத்தை நடத்தி வைத்தனர். கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஹிந்து அறநிலைய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், திருக்கல்யாண வடிவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர்.

Updated On: 22 April 2024 8:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்