மதுரை கோயில்களில், தேய்பிறை அஷ்டமி திருவிழா!

மதுரை கோயில்களில், தேய்பிறை அஷ்டமி திருவிழா!
X
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் பூஜை:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பைரவருக்கு அனைத்து வகையான விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நிகழ்த்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் காலபைரவரை தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அபிஷேகம், வடைமாலை அணிவித்து, தயிர்சாதம் படைக்கப்பட்டு, அர்ச்சணைகள் நடைபெற்றது.

பக்த கோடிகள் பங்கேற்று கால பைரவரை வணங்கினர்.இதேபோல், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில், கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது பக்தர்கள் காலபைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் எலுமிச்சம்பாலை அணிவித்தும், வழிபட்டனர் மதுரை அருகே, திருவடகம் ஏடகநாத சுவாமி ஆலயத்தில் காலபைரவருக்கு பக்தர்கள் வடைமாலை அணிவித்தும், பூக்கள் அணிவித்தும் காலபைரை வழிபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!