மதுரை அருகே சினிமா திரையரங்கில் கையாடல், ஊழியர்கள் கைவரிசை

மதுரை அருகே சினிமா திரையரங்கில் கையாடல், ஊழியர்கள் கைவரிசை
X

மதுரையில் உள்ள சினிமா திரையரங்கு.

மதுரையின் பிரபல திரையரங்கில் ஆறு மாதமாக பில் போடாமல் பாப்கார்ன் விற்பனை செய்து 3 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

மதுரை வில்லாபுரம் பகுதியில், உள்ள வெற்றி சினிமாஸ் என மூன்று திரையரங்கம் உள்ளது . திரையரங்கின் மையப் பகுதியில், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேண்டின் உள்ளது.

கேண்டினில் பணிப அவனியாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார்( வயது22) , மற்றும் வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் ( வயது19) ஆகிய இரு ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

மெய்யப்பன் கேண்டினில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சரவணன் கடந்த எட்டு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கேண்டீனில் பணிபுரியும் மெய்யப்பன், சரவணன் இருவரும் பில் போடாமல் பாப்கார்ன் மற்றும கூல்ட்ரிங்க்ஸ்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து, கேண்டீன் மேலாளர் முனியராஜன் கணக்கு பார்த்தபோது கடந்த ஆறு மாதங்களில் மூன்று லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முனியராஜன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அவனியாபுரம் காவல்துறையினர் மெய்யப்பன் மற்றும் சரவணன் இருவரையும் விசாரணை செய்ததில் இருவரும் பில் போடாமல் பாப்கான் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்களை ரூபாய் மூன்று லட்சம் அளவில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்

திரையரங்க கேண்டின் மேலாளர் முனியராஜா அளித்த புகாரின் அடிப்படையில் , மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு மெய்யப்பன், சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!