ஜெயலலிதா மகள் என கூறி மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்திய பெண்
ஜெயலலிதா மகள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலட்சுமி.
கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய பிரேமா என்கிற ஜெயலட்சுமி என்ற பெண் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்திருந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக மதுரை வந்துள்ளேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்றார்.
அரசியல் வருகை குறித்து கேள்விக்கு அம்மாவின் (ஜெயலலிதா) ஆசையை நிறைவேற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட வந்தேன் என்றார்.
தேனி தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்த கேள்விக்கு
அது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் எப்போதும் வெற்றி பெறுவார். அதனால் சென்டிமென்டாக அங்கு போட்டியிடுகிறேன். தேனி தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான். எனக்கு மக்கள் பலம் இருப்பதால் தான் போட்டியிடுகிறேன். அம்மா கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நடைபெறவில்லை. கட்சியும் நான்காக பிரிந்துள்ளது. அதனால் நான் வந்து மீண்டும் அம்மா செய்த திட்டங்களை செய்ய விரும்புகிறேன் என்றார்.
டிடிவி தினகரனை தோற்கடிப்பதற்காக தேனியில் நிற்கிறீர்களா? என்ற கேள்விக்கு நாங்கள் வெற்றி பெற போட்டியிடுகிறோம், யாரையும் தோற்கடிப்பதற்கில்லை என்றார்.
ஜெயலலிதாவை சந்தித்தபோது அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் உங்களை பார்த்துள்ளார்களா என்ற கேள்விக்கு பார்த்துள்ளார்கள் ஆனால் ஏன் அதை வெளியில் சொல்லவில்லை என்று தெரியவில்லை என்றார்.
ஜெயலலிதா வின் வாரிசு தான் என்பதற்கான டி.என்.ஏ டெஸ்ட் குறித்த கேள்விக்கு. தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அனுப்பி உள்ளோம் முடிவு வர காத்திருக்கிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu