மதுரை அருகே சித்திவிநாயகர் ஆலயத்தில் வளர்ந்துள்ள முட்புதர்கள் அகற்றப்படுமா?
மதுரை சித்திவிநாயகர் கோயியில் மண்டிக்கிடக்கும் முள்புதர்
மதுரை மாவட்டம், திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும்.
மதுரை திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கணபதி ஹோமம் மற்றும் கும்ப அபிஷேகத்துடன் சதுர்த்தி விழா விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும். இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு மகா தீப, தூப ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தினமும் மாலை லட்சார்ச்சனையும் நடை பெறும். லட்சார்ச்சனையின் நிறைவாக விநாயகப் பெருமானுக்கு மகா அபிஷேகமும் பிறகு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகப் பெருமான் எருந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இத் திருக்கோயிலில், கடந்த சில ஆண்டுகளாகவே, கோவிலில் உட்புற பகுதிகளில் முட் புதர்கள் பெருமளவில் குப்பை கிடங்குகளாக பராமரிப்பின்றி காணப்படுவதால், அதனுள்ளே பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷமுடைய ஜந்துகள் நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். அலட்சியப் போக்கில், கோவில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் அன்னதான கூடத்தில் அன்னதானம் உண்ணவரும் பக்தர்களுக்கு, குடிநீர் வழங்குவதில்லை எனவும் , அங்கு கோயிலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரையே சமைத்தும், பக்தர்களுக்கும் அதனையே குடிநீராக வழங்கப்படுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu