மதுரையில் சில்மிஷம் செய்த இளைஞரை ஓட ஓட விரட்டி வெளுத்து வாங்கிய இளம்பெண்
மதுரையில் குடிபோைதயில் சில்மிஷம் செய்த இளைஞரை வெளுத்து வாங்கிய இளம்பெண்.
தன்னிடம் குடிபோதையில் தவறாக நடந்த நபரை துணிச்சலுடன் தட்டிகேட்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டுகள்:
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பாக காணப்படும் பகுதியில், பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை பெரியார் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் துரத்தி சென்று, அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 36) .என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திடீர் நகர் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தவறு செய்த நபரை துணிச்சலுடன் தட்டிக் கேட்டு பெண்ணின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மதுரை நகர போலீசார், வரும் காலங்களில் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில், தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்களை, பகுதியிலிருந்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu