சாலையில் ஓடும் உபரி நீரில் மீன் பிடிக்கும் பொது மக்கள்

சாலையில் ஓடும் உபரி நீரில்   மீன் பிடிக்கும்   பொது மக்கள்
X

மதுரையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

மழைநீர் வாய்க்காலில் சிமெண்ட் ஸ்லாப் போடப்பட்டுள்ளது. அதை உடைத்து அதில் இருந்து மீன்களை பிடித்து செல்கின்றனர்

மதுரையில் நிரம்பிய கண்மாயிலிருந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் துள்ளி குதித்த மீன்களை பொதுமக்கள் பிடித்துச்சென்றனர்.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமான காரணத்தினால் அனைத்து கண்மாய்களும் நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேறத் தொடங்கியது.. மதுரை மாடக்குளம் கண்மாய் முழு அளவையும் எட்டி வெளியேறும் உபரி நீர் கிருதுமால் நதியில் கலந்து செல்வது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக கிருதுமால் நதி தூர்வாரப்படாத வெறும் சாக்கடை நீர் மட்டுமே சென்று கொண்டிருந்தது. இப்பொழுது, மாடக்குளம் கண்மாய் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் நீர்வரத்து அதிகரித்து. இதனால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. இப்படிப் பாயும் தண்ணீருடன் மீன்களும் அதிக அளவு வருவதால் மீன்களை பிடிக்க பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லிஸ் நகர்சாலை, முத்து நகர் மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வாய்க்கால் வழியாக தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். மழைநீர் வாய்க்காலில் சிமெண்ட் ஸ்லாப் போடப்பட்டுள்ளது. அதை உடைத்து அதில் இருந்து மீன்களை பிடித்து செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் அந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அதனுள்ளே விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் செல்லும் நீரை மாற்று வழியில் திருப்பி விட வேண்டும் எனவும் சிமெண்ட் ஸ்லாப்பை யாரும் உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai tools for education