அதிமுக மாநாட்டுக்கு தயாரித்த உணவு, பந்தல் அருகே கொட்டியதால் வீசும் துர்நாற்றம்
அதிமுக மாநாட்டுக்கு தயாரித்து வீணான உணவு வகைகள்.
மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாட்டில் கொட்டப்பட்ட சோற்றில் மண்ணை அள்ளி ஜேசிபி எந்திரம் மூலம் போட்ட அதிமுகவினர்:
மதுரை வலையங் குளத்தில் கடந்த 20 தேதி அதிமுக மாநாடு நடைபெற்றது. இதற்காக அதிமுக கட்சி சார்பில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில், புளியோதரை, சாம்பார் சாதம் தரம் அற்ற முறையிலும் அரைவேக்காட்டில் இருந்ததால், அதிமுக தொண்டர்கள் வாங்கி சாப்பிடாமல் கீழே கொட்டினர். அதிமுக தொண்டர்கள் யாரும் உணவு வாங்காததால், மாநாட்டு பந்தலிலே சுமார் 1 டன் அளவிற்கு சமையல் செய்த புளியோதரை சாம்பார் சாதம் மீதமானதால் நேற்று கொட்டப்பட்டது,
இதைத் தொடர்ந்து, ஊடகங்கள் மூலம் சுகாதாரம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் புல் டோசர் மூலம் குழி தோண்டி வீணான புளியோதரை சாதத்தில் மண்ணை அள்ளி மாநாட்டுத் திடல் அருகே குவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு, ஒருவருக்கு ஆகாதவர் ஏதாவது இடைஞ்சல் செய்தால் திங்கிற சோற்றில் மண்ணை அள்ளி போட்டாயே எனக் கூறுவார்கள்.அந்த பழமொழிக்கு ஏற்ப, அதிமுக வினரே சோற்றில் மண்ணை அள்ளி போட்டுள்ளனர் என பொதுமக்கள் விமர்சனம் செய்கின்றனர்.
மாநாட்டு பந்தலில், கொட்டப்பட்ட உணவுகளால் சுகாதார சீர்கேடு சர்ச்சைகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா என்பதால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.மதுரை மாநகராட்சியினர் துரித நடவடிக்கை எடுத்து, வீணாக கொட்டப்பட்டுள்ள உணவு வகைகளை அப்புறப்படுத்த ஆர்வம் காட்ட அப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu