மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர்
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர் களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச் சாலையில், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான மகாமுனி மற்றும் அவரது உறவினரான ஆனந்த் ஆகிய இருவரும் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை ஆனந்த் ஓட்டிவந்து கொண்டிருக்கும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி, எதிரே சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் சமையல் எண்ணெய் கண்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் மகாமுனி ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் அவர்களை மீட்க முயற்சித்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் தீயணைப்புத்துறையினர், விபத்தில் காரில் சிக்கியவர்களை 108 அவசரக்கால ஊர்தி ஓட்டுனர் ஹரி மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் சிக்கிக்கொண்ட நபர்களை அங்கேயே சிகிச்சை அளித்து பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விபத்தால் மேலூர் - திருச்சி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu