இந்தியாவை தமிழன் தான் ஆளவேண்டும்: பாஜக நிர்வாகி சீனிவாசன் பேச்சு
மும்பை தாராவில் பாரதிய ஜனதா கட்சி தென்னிந்திய பிரிவு சார்பாக நடந்த தமிழர் திருநாள் தை பொங்கல் விழா
தமிழன் இந்தியாவை ஆள வேண்டும் என்று நினைப்பது பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என்றார் மாநில பொது செயலாளர் சீனிவாசன்
பின்னர் அவர் பேசியதாவது: மும்பை தமிழர்கள் தமிழ்நாட்டை விட அதிக உற்சாக அளவில் பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் என்பது வீட்டு திருவிழா ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் கோலமிட்டு அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைப்பார்கள்.
ஆனால்,இங்கு அது ஒரு சமூகதிருவிழா வாக இருக்கிறது. கடவுள் மறுப்பாளர்களாக தொடங்கிய இயக்கம் பிராமணர் எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு வட இந்திய எதிர்ப்பு என்று தன் சித்தாந்தத்தை மாற்றிக் கொண்ட இயக்கம். தற்போது, இந்தியாவுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பது தி.மு.க. ஆனால் ,தமிழன் இந்தியாவை ஆள வேண்டும் என்று நினைப்பது பா.ஜ.க என்று அவர் பேசினார்.
ஓ.பி.சி.அணி முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, மாநிலச் செயலாளர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய பிரிவுமாநில தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், மும்பை பா.ஜ.க மாநில தலைவர் சந்திரசேகர் பவன் கோலே, ஹோலிவடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், 1008 தமிழ் பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முடிவில் முகிலன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu