தமிழக எல்லைகள் மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா: முன்னாள் அமைச்சர்

தமிழக எல்லைகள் மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா: முன்னாள் அமைச்சர்
X
கேரளா அரசின் டிஜிட்டல் ரீ-சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை மீட்டெடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்

கேரளா அரசின் டிஜிட்டல் ரீ-சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை மீட்டெடுக்க தமிழக அரசு முன் வராமல் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலோடு, தூங்கிக் கொண்டிருக்கின்ற திமுக அரசை தட்டி எழுப்புகிற இந்த கோரிக்கையை முன் வைக்கின்றோம். கேரள அரசின் டிஜிட்டல் மறு நில அளவீடு சர்வே தமிழக நிலப்பரப்புக்கு ஆபத்து என்று ஏற்கெனவே வருவாய்த்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இரண்டு முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்பது தமிழக விவசாயிகளிடம்மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் 1ம் தேதியில் இருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் முறையில் மறு நில அளவீட்டை சர்வேயர் அளவைக்கு தமிழக எல்லையில் உள்ள ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்று பெரியார் விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு, கவனக் குறைவாக இருந்து அந்த எல்லையை விட்டுக் கொடுத்து விடுவோம் என்கிற அச்சம் பெரியார் பாசன வைகை பாசன விவசாயிகள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த டிஜிட்டல் மறு நிலவை அளவீட்டால் தமிழகத்தை ஒட்டி இருக்கும் கேரளத்தின் ஏழு மாவட்டத்தில் உள்ள 15 தாலுகாக்கள் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

1956 மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின்போது சல்அலி தலைமையிலான கமிட்டி கொடுத்த வரையரின் அடிப்படையில் தமிழக கேரள எல்லைகள் பிரிக்கப்படவில்லை. தமிழக கேரளா எல்லையில் உள்ள 822 கிலோமீட்டர் தூரம் இன்னும் அது முழுமையான அந்த எல்லையை நாம் வரையறுக்கவில்லை என்பதும் நம்முடைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக விவசாயிகள் கூறுவது போல், முதலில் ஜமீன்பட்டா அடிப்படையிலும், 1956 மொழிவாரி பிரிவினை கமிட்டி கொடுத்த நில வரைவியல் அடிப்படையிலும், முதலில் அளவீடு செய்து, தமிழக கேரள எல்லையை முழுமைப்படுத்த வேண்டும். இதுதான் கோரிக்கையாக இருக்கிறது. அப்போதுதான் மறு அளவீடு முழுவிவரம் முழுமை பெறும் இல்லாவிட்டால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய நிலப்பரப்புகளை தமிழகம் இழப்பதற்கான ஒரு அபாயகரமான சூழ்நிலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைத்தான், தமிழக அரசு இன்றைக்கு கவனத்தில் எடுத்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

அது மட்டுமின்றி, மத்திய பார்வையாளர்கள் இல்லாமல் டிஜிட்டல் மறு நில அளவீட்டை கேரளா அரசு நடத்துவது மிகப் பெரும் பிரச்னைக்கு வழி வகுக்கும்.கேரளாவின் தேவிகுளம், சுல்தான், பத்தேரி, சித்தூர், ஆலத்தூர், புனலூர், நையாற்றில் கரை உள்ளிட்ட 15 தாலுகாக்களில் மத்திய பார்வையாளர்களைக் கொண்டு நிலங்களை மறு அளவீடு செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

நான் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறபோது, இது போன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் விவசாயிகளுடைய அச்சத்தை போக்கி நாம் முறையாக எல்லையை வரையறை செய்ய வேண்டுமென எங்களுக்கு உத்தரவிடடார். அதன்படி, நடவடிக்கையை எடுக்கப்பட்டது. கேரள அரசின் இன்றைய டிஜிட்டல் சர்வேயில் யாருக்கும் எந்தவிதமான கவலையும் இல்லை. ஆனால், நம்முடைய எல்லைப் பகுதியை வரையறை செய்கிறபோது. அது முறையாக செய்ய வேண்டும் .

தமிழ்நாடு, கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு நில அளவை பணியினை நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது தொடர்பாக விவசாயிகள் வருவாய் துறை அமைச்சரிடம் முறையிடுகிற போது, இப்பொருள் குறித்து ஏற்கெனவே, 9.1.2022 அன்று வருவாய்த்துறை அமைச்சர் விளக்கம் சொல்லியிருந்தாலும் கூட 10.11.2022 தமிழக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், கேரளா அரசு நவீன நில அளவை மேற்கொள் தொடர்பாக வருவாய்த்துறை செயலர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், தேவராம் கிராமத்தை உள்ளடக்கிய ஆனைக்கல்லுக்கும் பாப்பம்பாறைக்கும் இடையே இந்த எம்பது ஏக்கர் பரப்பளவில் கேரளா சர்க்காருக்கு சொந்தமானது என்று கேரளா போர்டு வைத்திருக்கிறது.

இதற்கு, தமிழ்நாடு அரசு இதுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறது, இதற்கு என்ன பதில் பேசப்போகிறார், வருவாய்த்துறை அமைச்சர். அன்றைக்கு முதலமைச்சர் இருந்த எடப்பாடியார் இப்பிரச்னை குறித்து உடனடியாக போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து எங்களை நேரடியாக அனுப்பி அங்கு சென்று ஆய்வு செய்து , கேரளா மாநில அரசினுடைய அதிகாரிகளோடும் அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆணையிட்டார்.

அதுபோல், இன்றைய முதலமைச்சர் அந்த பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற, கேரள மாநிலத்திற்கு ஆணையிட்டு இருக்கிறாரா ? இந்த பிரச்னை பற்றி முதலமைச்சர் வேடிக்கை பார்த்தால் டிஜிட்டல் ரீ சர்வே ஒருவேளை கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களும் கேரளா எல்லைக்குள் வருகிறது என்று சொல்லி அங்கு ஒரு போர்டு வைத்தாலும் வைப்பார்கள். நேரடியாக, தேனி மாவட்டத்திற்கே வந்து மதுரை மாவட்டத்திற்கு வந்து ஒரு போர்டு வைத்தாலும் வைப்பார்கள் என்று விவசாயிகள் பேசிக் கொள்கிறார்கள்.

வருவாய்த்துறை செயலர் 10.11.2022 அன்று வெளியிட்டட அறிக்கையில்,கூட அதில் மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்து கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டு இருந்ததாகவும், கேரள மாநிலம் தொடுபுழா மறு நில அளவை அலுவலர்களுக்கு உதவி இயக்குனருக்கு கடிதம் வரை மூலம் தெரிவிக்கவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும் என்று வருவாய் துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார் ,

எந்த விதமான டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என, தேனி வனக்கோட்டம், மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும், தமிழகவனசரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப் படுவதாகவும், இங்கே வருவாய் துறை செயலர் செய்தி குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள் .ஆனால், கேரளா அரசு சர்வே செய்து போர்டு வைத்துள்ளார்கள்.

இது தமிழக அரசின் கவனத்தில் வந்ததா ஒப்புதல் பெறப்பட்டதா? ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதா? அதிலே முடிவெடுக்கப்பட்டதா? அதற்குப் பிறகு இது நடப்பட்டதா? அல்லது அவர்களுடைய உரிமை என்று சொல்லி அவர்களுடைய எல்லை பதிலாக நம்முடைய நிலப்பரப்பை அபகரிக்கின்ற என்பதை விளக்குவதற்கு தமிழக அரசு முன்வருமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags

Next Story